உண்மையான அன்பு என்றும் தோத்துப்போகாது என்பது நீதானே என் பொன்வசந்தம். தன் குடும்பத்திற்காகவே உழைத்து அண்ணன் தம்பிகளின் வாழ்க்கைக்காக தன்னை தேய்த்துக் கொண்டவள் சங்கரி. அவள் ஒரு பையனை எடுத்து வளர்க்கிறாள். ஆனால், தவறான புரிதலின் காரணமாக அந்தப் பையன் அவனை விட்டு விலகி போய்விடுகிறான். அதில் மனம் குழம்பி, புத்தி தடுமாறி கைகால் வராமல் போன சங்கரியை அவளுடைய அண்ணன், தம்பி குடும்பங்கள் கைவிட்டு விடுகிறது. அந்த சமையத்தில் ஆஸ்பத்திரியில் அவளை பார்த்து தன்னுடன் வீட்டிற்கு அழைத்து வருகிறாள் யமுனா. அவளுடைய கம்பெனி மேனேஜராக வருகிறான் சங்கரியின் வளர்ப்பு மகன். மெல்ல மெல்ல அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள உறவை, அன்பை புரிந்து கொண்டு வளர்ப்பு மகனையும், சங்கரியையும் சேர்த்து வைக்கிறாள் யமுனா. யமுனாவை தன் மகனுக்கே திருமணம் செய்து வைக்கிறாள் சங்கரி. அவன்மேல் வைத்த உண்மையான அன்பு, தன் தாயாரை புரிந்து கொள்ளாமல் போய்விட்டோமே என்ற ஆதங்கமுமே இருவரும் இணைவதற்கு காரணமாகிறது.
काल्पनिक कहानियां और साहित्य