அந்தப் பெண்ணுக்கு திருமணம் செய்தாக வேண்டும். எனவே ஹரி அவளை கல்யாணம் செய்து கொண்டால்தான் சுதா அவள் புருஷனுடன் வாழ முடியும் என்று மாமியார் கண்டிஷன் போடுகிறார். ஆனால் சுதா ஆத்மார்த்தமான ஒரு காதலைப் பிரிக்க முடியாது. அதே சமயம் என் மனதிலும் என் கணவன் மீதான ஆசையும், பாசமும் நேசமும் இருக்கிறது. உண்மையான காதல் என்றும் தோற்காது. எனவே ஷைலஜாவின் காதலும் ஒரு நாள் ஜெயிக்கும் என்று கூறி, சைலஜாவின் காதலனுடன் அவளையும் ஹரியின் காதலியுடன் அவனையும் சேர்த்து வைக்க முயற்சி செய்கிறாள்.
ஆனால் கணவன் விவாகரத்து கேட்கிறான். சுதாவின் மாமியாரும் இதற்கு ஒத்துக்கொள்வதில்லை. ஒரு போராட்டத்தில் இறங்குகிறாள் சுதா. இதில் அவள் ஜெயித்தாளா? ஹரி தன் காதலியுடன் இணைந்தானா? சுதா தன் வாழ்க்கையை மீட்டாளா என்பதே உள்ளம் ரெண்டும் ஒன்று என்ற நாவல்.