Google Maps Go என்பது அசல் Google Maps ஆப்ஸின் மேம்பட்ட இணைய ஆப்ஸ் மாற்றாகும். இது குறைந்த அளவுடையது.
இந்தப் பதிப்பு இயங்க Chrome தேவை (Chrome ஆப்ஸை நிறுவ விரும்பாவிட்டால் உங்கள் உலாவியில் www.google.com/maps என்ற இணையதளத்தைப் பயன்படுத்தவும்).
முழுமையான Google Maps ஆப்ஸைவிட 100 மடங்கு குறைவான சேமிப்பகத்தை உங்கள் சாதனத்தில் Google Maps Go ஆப்ஸ் பயன்படுத்தினாலும் குறைவான நினைவகம் மற்றும் நிலையற்ற நெட்வொர்க்குகளைக் கொண்ட சாதனங்களிலும்கூட வேகம் குறையாமல் சுமூகமாக இயங்குமாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே உங்கள் இருப்பிடம், நிகழ்நேர டிராஃபிக் விவரங்கள், வழிகள், ரயில், பேருந்து, நகர டிரான்ஸிட் தகவல்கள் போன்ற அனைத்தையும் இது வழங்குகிறது. லட்சக்கணக்கான இடங்களின் ஃபோன் எண்கள், முகவரிகள் போன்ற தகவல்களையும் இதில் தேடிக் கண்டறியலாம்.
• இருசக்கர வாகனங்கள், மெட்ரோ, பேருந்துகள், டாக்சி, நடைப்பயணம், படகுகள் போன்ற அனைத்தையும் சேர்த்து, பயணத்திற்கான வேகமான வழியை இதில் கண்டறியலாம்
• மெட்ரோ, பேருந்து, ரயில் ஆகியவற்றின் நிகழ்நேரப் பொதுப் போக்குவரத்து அட்டவணைகளின் உதவியுடன் பயணம் செய்யலாம்
• படிப்படியான வழிகளுடன் காட்டப்படும் பயண வழிக்கான மாதிரிக்காட்சி மூலம் உங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடலாம்
• நிகழ்நேர டிராஃபிக் தகவல்கள், டிராஃபிக் வரைபடங்கள் ஆகியவற்றின் மூலம் வேகமாகச் சென்றடையலாம்
• புதுப்புது இடங்களைத் தேடிக் கண்டறியலாம்
• உள்ளூர் உணவகங்கள், பிசினஸ்கள் மற்றும் அருகிலுள்ள பிற இடங்களைத் தேடிக் கண்டறியலாம்
• வாடிக்கையாளர்களின் கருத்துகளைப் படித்தும், உணவுகளின் படங்களைப் பார்த்தும் எங்கு செல்வதெனத் தீர்மானிக்கலாம்
• குறிப்பிட்ட இடத்தின் ஃபோன் எண்ணையும் முகவரியையும் கண்டறியலாம்
• உங்களுக்குத் தேவையான இடங்கள் அல்லது அடிக்கடி போக விரும்பும் இடங்களைச் சேமித்துக் கொண்டு, அவற்றைப் பின்னர் உங்கள் மொபைலில் விரைவாகக் கண்டறியலாம்
• 70க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த ஆப்ஸ் கிடைக்கிறது
• சாட்டிலைட் மற்றும் நிலப்பகுதி வரைபடங்கள் உட்பட, 200 நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்குமான விரிவான, துல்லியமான வரைபடங்களைப் பெறலாம்
• 20,000க்கும் மேற்பட்ட நகரங்களுக்கான பொதுப் போக்குவரத்துத் தகவல்களைப் பெறலாம்
• 10 கோடிக்கும் அதிகமான இடங்களின் விரிவான பிசினஸ் தகவல்களைப் பெறலாம்
____
பீட்டா சோதனையாளராக இதைப் பயன்படுத்த https://goo.gl/pvdYqQ என்ற தளத்திற்குச் செல்லுங்கள்
புதுப்பிக்கப்பட்டது:
24 அக்., 2023